Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

15 ஆண்டுகளுக்குப் பின் புதுபித்த கோவில்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மகா மாரியம்மன் கோவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுபிக்கபட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் மிகப்பழமையான மகா மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று காலை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்நிலையில் கணபதி பூஜை, யாகசாலை பூஜை, நான்கு கால பூஜை, யாத்ரா தானம், உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து ஆய்யனார், திரௌபதி அம்மன் விநாயகர் பெருமாள் ஆகியோருக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த விழாவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த  திருவிழாவில் வடக்கு மாவட்ட செயலாளர் துரை, சண்முக பிரபு, ஒன்றியக்குழு தலைவர் கோபிநாதன், பாபநாசம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தியாகை, பழனி, கூட்டுறவு சங்க நிர்வாகி கண்ணன், சதீஷ், கவுன்சிலர் ஜீவிதா, ஊராட்சி தலைவர் ஜெயந்தி பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |