Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் நாளை தொடக்கம்….!!!!

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை  நடைபெற உள்ளது.

தமிழகத்தின் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. மேலும் மாநிலம் முழுவதும் பதிவான வாக்குகள் 268 மையங்களில் பாதுகாப்பான முறையில் வைத்து எண்ணப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணப்படும் அறைகளில் தலா 14 மேஜைகள் போடப்பட்டு மற்றும் அந்த மேசைகளை சுற்றி தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணும் அறைகளில் அலுவலர்கள், வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் ஆகியோர் அமருவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து முடித்து தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |