Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தெருவில் நடந்து சென்ற தொழிலாளி…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி கோவில்பத்து தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் முருகன் தெருவில் நடந்து சென்ற போது அதே பகுதியில் வசிக்கும் முத்துராமலிங்கம் என்பவர் மது குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கோபமடைந்த முத்துராமலிங்கம் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துராமலிங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |