இந்தியாவின் பஞ்சாப்,கோவா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. எனவே அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் அமேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “லட்சுமிதேவி யாருடைய வீட்டிற்கும் சைக்கிளிலோ, யானை மீதோ அல்லது உங்கள் கைகளில் அமர்ந்து கொண்டு வருவதில்லை.
அவர் தாமரை மீது தான் அமர்ந்து அமர்ந்துதான் அருள்பாலிக்கிறார். இதனை சில கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் காங்கிரஸைப் பொறுத்தவரை தன்னுடைய கூற்றுதான் சரி என பூனை தன் கண்களை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டதாக எண்ணுவதை போல நடந்து கொள்கிறது என அவர் பேசினார். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் போன்ற கட்சிகளை விமர்சிக்கும் வகையில் மறைமுகமாக அவர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.