ரோந்து பணியில் சென்ற பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு துறையினர் 31 இந்திய மீனவர்கள் கைது செய்துள்ளார்.
பாகிஸ்தான் கடற்படை எல்லைக்குள் மீன்பிடிக்க சென்ற 31 இந்திய மீனவர்களை அவர்கள் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்திருப்பதாவது.
கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி பாகிஸ்தான் சிறப்பு பொருளாதார மண்டல கடற்பகுதிக்குள் கடல்சார் பாதுகாப்பு துறையினர் ரோந்து பணிக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு 5 இந்திய மீன்பிடி படகுகள் பாகிஸ்தான் பாதுகாப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தப் படகுகளில் 31 மீனவர்கள் இருந்ததாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்திய மீன்பிடி படகுகள் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக கராச்சி கொண்டு செல்லப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் கடல் எல்லைகளை மீறி மீன்பிடிக்க செல்வதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருதரப்பிலும் மீனவர்கள் கைது செய்யப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது