ரஜினிகாந்தின் 170 படம் பற்றிய வதந்திகளுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் முற்று புள்ளி வைத்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக போனி கபூர் இருந்து வருகிறார். மேலும் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை தமிழில் தயாரித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது பிரம்மாண்டமாக வெளியாக உள்ள வலிமை படத்தையும் போனிகபூர் தான் தயாரித்துள்ளார். தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ரஜினியின் 170 படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் “ரஜினி சார் எனது பல வருட நண்பர். நாங்கள் அடிக்கடி சந்தித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறோம். நாங்கள் இணைந்து பணியாற்றும் ஒரு படத்தை இறுதி செய்தால் அதை நான் தான் முதலில் அறிவிப்பேன். இதுபோன்ற தவறான செய்திகளை நீங்கள் பெற நம்ப வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.