Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவரே என்ன சொல்றிங்க?…. “ரஜினி எடுத்த அதிர்ச்சி முடிவு”…. பிரபலம் கூறியதால் நடந்த அதிசயம்….!!!!

உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் சினிமாவை விட்டு செல்ல முடிவெடுத்த நடிகர் ரஜினி.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர். தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வந்தார். அதன் பின் சில படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்து புகழ் பெற்றார். இதனை தொடர்ந்து சமீபத்தில் ரஜினியின் உடல்நிலை சரியில்லாமல் போனது.

இந்நிலையில் திரை உலகில் இவ்வளவு கஷ்டப்பட்டு நாம் நடிக்க அவசியம் இல்லை உடல்நிலை தான் முக்கியம் என கருதி சினிமாவை விட்டு செல்ல முடிவெடுத்துள்ளார் ரஜினி.  நடிகர் ரஜினிகாந்தின் இந்த முடிவை நண்பர்களிடம் கூறினார். இது ரஜினியை திரை உலகில் அறிமுகம் செய்த கே பாலச்சந்திரனுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரஜினியிடம் கே பாலச்சந்தர் பேசியதாவது,  “நான் எதற்காக உன்னை சினிமாவில் அறிமுகம் செய்தேன். திரை உலகை விட்டு சென்று நீ உன் பெயரை கெடுக்கபோறியா.

சினிமா என்றால் ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும் இதை நீ பொருத்துக் கொண்டால் பிற்காலத்தில் இந்த உலகமே போற்றும் அளவிற்கு பெரிய ஆளாக வருவாய்” என்று ரஜினிக்கு அட்வைஸ் செய்து மீண்டும் நடிக்க சொன்னார் கே பாலசந்தர். நடிகர் ரஜினி, கே பாலச்சந்திரனின் பேச்சை ஒருபோதும் மறுத்துப் பேச மாட்டார் என்பதால் அவர் சினிமாவை விட்டு போகும் முடிவை கைவிட்டுவிட்டர் என்பது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |