இந்திய அணியின் வேகப்பந்து விச்சு மற்றும் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா. இவர் கடந்த 2019 அறுவை சிகிச்சை கொண்டதிலிருந்து பந்து வீச முடியாமல் இருந்து வருகிறார். கடந்த ஐபிஎல் 16 வது சீசனிலும் பந்து வீசவில்லை இதன் காரணமாக தொடங்கயிருந்த டி20 உலக கோப்பையில் இவர் சேர்க்கப்பட மாட்டார் என கருதப்பட்டது. இருப்பினும் இவர் பெயர் இடம் பெற்றிருந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவரான சேத்தன் சர்மா இதுகுறித்து விளக்கம் அளித்தார்.
அதில் டி20 உலக கோப்பையில் ஹார்திக் பாண்டியா நிச்சயம் பந்து வீசுவார் எனவும் அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என தெரிவித்தார். இதன் காரணமாக டி 20 உலககோப்பையில் ஹார்த்திக் பாண்டியன் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக பந்து வீசவில்லை. பேட்ஸ்மேனாக மட்டும் இடம் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 2வது போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பந்துவீசி 2 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளுக்கு எதிராக ஒரு சில ஓவர்களை மட்டுமே வீசினார்.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஹார்திக் பாண்டியா “டி20 உலகக் கோப்பையின் போது பேட்டராக மட்டுமே இடம் பெற்றிருந்தேன். இருப்பினும் முதல் போட்டியில் பந்துவீச கடுமையாக பயிற்சி செய்தேன். ஆனால் அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது போட்டியில் வீசி விடுவேன்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவிற்கு ஹர்திக் பாண்டியா ஒரு பேட்மேனாக மட்டுமே சேர்த்துள்ளது தெரியவந்தது.
இவ்வாறு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாமல் அணியை தேர்வு செய்து, லீக் சுற்றுடன் இந்திய அணி திரும்ப காரணமாக இருக்கும் சேத்தன் ஷர்மா உடனடியாக பதவி விலக வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில் இவர் முழு ஃபிட்னசுடன் இருந்தும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அணியில் சேர்க்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சேத்தன் ஷர்மாவை பிரச்சனையில் மாட்டி விட்டதால் தான் ஹார்திக் பாண்டியாவிற்க்கு இடம் கொடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிக சிறப்பாக விளையாடினாலும் கூட வருகிற அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி 20 உலகக் கோப்பை தொடரில் வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.