உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து மற்றும் கவுன்சிலர் பதவிகளை கணவன், மனைவி வென்று வியப்படைய வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திமுக கூட்டணி அதிக மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியது. தேர்தல் முடிவின் படி தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை ஆளும் அதிமுக கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட முக்காணி பஞ்சாயத்து மற்றும் கவுன்சிலர் பதவிகளை கணவன், மனைவி வென்றது வியப்படையச் செய்துள்ளது. முக்காணி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பேச்சித்தாய் 980 வாக்குகள் வித்தியாசத்திலும், கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட திரு சி. நாராயணன் அவர்கள் 711 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கணவன் , மனைவி இருவரும் வெற்றி பெற்றது குறித்து திரு.நாராயணன் அவர்கள் கூறுகையில், 20 ஆண்டுகளாக மக்கள் சேவையை முன்னெடுத்து வருகின்றேன்.மக்களுக்காகவே வாழ்ந்து வருகிறேன்.மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக என்னை அரசியலில் அற்பணித்துள்ளேன் என்று தெரிவித்தார். வெற்றி பெற்ற இந்த தம்பதியினருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.