தமிழகம் முழுவதும் மார்ச் 4-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 4 ஆம் தேதி அய்யா வைகுண்டர் பிறந்த தினமான அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என சாமிதோப்பு பால ஜனாதிபதி மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதன்படி 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஜாதிக் கொடுமைகள் அதிகமாக இருந்தது. முக்கியமாக தென்னிந்தியாவில் கன்னியாகுமரி மற்றும் கேரள பகுதிகளில் மக்களிடையே பல வேறுபாடுகள் காணப்பட்ட நிலையில், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க போராடியவர் அய்யா வைகுண்டர் . இவரின் பிறந்த தினமான மார்ச் 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் என கனிமொழி எம்பியிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு அய்யா வைகுண்டர் பிறந்த தினமான மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலம் முழுவதும் விடுமுறை விட வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.