Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு…. எங்கெல்லாம் தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான அறிக்கையை பெற்றது. அதன்படி சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை பென்சன்ட் நகர் ஓடைக்குப்பம் வார்டு எண் 179 வாக்குச்சாவடி எண் 5059, வண்ணாரப்பேட்டை 51-வது வார்டில் வாக்குச்சாவடி எண் 1174-ல் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல் மதுரை திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டு வாக்கு சாவடி எண்17 W, அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 16-வது வார்டு வாக்குச்சாவடிகள் 16M, 16 W, திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டு வாக்குச்சாவடிகள் 57M, 57W ஆகிய மையங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும்.

Categories

Tech |