Categories
மாநில செய்திகள்

பரபரப்பு: மீண்டும் “சென்னையில்” லாக்டவுனா…? அரசின் முடிவு என்ன?….!!

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் முதல் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தற்போது வரை உலக நாடுகளுக்கு உருமாறி மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 238 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக கோயம்புத்தூரில் 157 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கையில் 46 சதவீதத்தை சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, ஈரோடு போன்ற மாவட்டங்கள் பெற்றுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக சென்னையில் 3 பேர், கோயம்புத்தூரில் 2 பேர், திருவள்ளுவர், தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தமாக 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள். இந்த சூழ்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமிருப்பதை மறந்துவிட்ட பொதுமக்கள் தங்களது அன்றாட வேலைகளை மும்மரமாக செய்து வருகிறார்கள். இதனால் தொற்று அதிகரித்தால் சென்னையில் மீண்டும் லாக் டவுன் உத்தரவை போடும் கட்டாயத்திற்கு அரசு தள்ளப்படும். ஆகையினால் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் தங்களது பாதுகாப்பு கருதி செயல்படுமாறு பல தரப்பினர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Categories

Tech |