Categories
மாநில செய்திகள்

“சூப்பர் நியூஸ் மாணவர்களே”…. ‘பி.வி.எஸ்சி’ படிப்பிற்கான கலந்தாய்வு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 28ஆம் தேதி முதல் ஆன்லைன்களில் பதிவு செய்யலாம் என மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் பி.வி.எஸ்சி படிப்பிற்கான சேர்க்கையில் 7.5% அரசு சிறப்பு இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு முதல் நாளான 24-ஆம் தேதி நடைபெறும். இதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு 25ஆம் தேதி நடைபெறும். மேலும் ஆன்லைன்களில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பிப்ரவரி 28ஆம் தேதி பொதுப்பிரிவு கலந்தாய்விற்கு பதிவு செய்ய வேண்டும். இதன் பின்பு விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளை தேர்வு செய்தல் மற்றும் கல்லூரி ஆகியவற்றை மார்ச் 3ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை மேலும் அறிய www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |