Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH: இலங்கைக்கு எதிரான “டி20 தொடர்”…. இந்திய அணியில் யாரெல்லாம் இருக்காங்கன்னு தெரியுமா…? முழு விவரம் இதோ….!!

ஏப்ரல் 14 முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணிக்கு எதிராக பங்கேற்று லக்னோ மற்றும் தர்மசாலா மைதானங்களில் வைத்து விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஆட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து கடைசி போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 3 நாள் போட்டிகள் பிப்ரவரி 24, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது மேலும் முதல் போட்டி லக்னோ மைதானத்தில் வைத்தும், மற்ற 2 போட்டிகள் தர்மசாலா மைதானத்தில் வைத்தும் நடைபெறவுள்ளது.

இவ்வாறு இருக்க டி20 தொடரில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணியில் ரிஷப் பந்த், விராட் கோலி போன்ற பல முக்கிய வீரர்களுக்கு இடம் கொடுக்கப்படவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியில் ருதுராஜ், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக், ஹர்ஷல், புவனேஸ்வர், முகமது சிராஜ், சாம்சன், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப், ஆவேஸ் கான், பிஸ்னோய் ஆகியோர் பங்கேற்கவுள்ளார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Categories

Tech |