Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி!…. தேர்வு அறையில் பாலியல் சீண்டல்…. ஆசிரியர்கள் கைது….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 52) என்பவர் வரலாறு பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவரை புதன்கிழமை அன்று தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தேர்வு மேற்பார்வையாளாராக இருந்த ராஜ்குமார் மாணவியின் மேஜை அருகே நாற்காலியை போட்டுக் கொண்டு அமர்ந்து காலால் அவரை சீண்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மாணவி வெளியே தெரிந்தால் அவமானம் என்று, மற்றவர்களுக்கு தெரியாமல் ஆசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் ஆசிரியர் ராஜ்குமார் தொடர்ந்து தனது வக்கிர புத்தியை காட்டி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி வீட்டில் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆசிரியர் ராஜ்குமார் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ஆசிரியர் ராஜ்குமார் தஞ்சை சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவரிடம் தேர்வு நடக்கும்போது, அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் முருகேசன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதாகியுள்ளார். ஒரே சமயத்தில் இருவேறு பள்ளிகளில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மற்ற பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |