Categories
தேசிய செய்திகள்

ஒரு மொபைல் நம்பர் வைத்து…. குடும்பத்துக்கே ஆதார் எடுப்பது எப்படி?.. முழு விவரம் இதோ…!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் பிவிசி என்ற சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஒரு பிவிசி கார்டில் டவுன்லோட் செய்ய அனுமதிக்கப்படுகிறது. சமீபத்தில் UIDAI, ஒரு நபர் ஒரு செல்போன் எண்ணை பயன்படுத்தி தனது குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பிவிசி ஆதார் அட்டைகளை ஆர்டர் செய்யலாம் என அறிவித்திருந்தது.

UADAI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை கண்டுகொள்ளாமல் அங்கீகாரத்திற்காக otp பெற நீங்கள் எந்த செல்போன் எண்ணெயும் பயன்படுத்தலாம். மேலும் ஒருவர் முழு குடும்பத்திற்கும் pvc  ஆதார் கார்டுகளை   ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என கூறியது.

மேலும் பதிவு செய்யப்படாத அல்லது மாற்று மொபைல் எண்ணை பயன்படுத்தி ஆதார் அட்டை ஆர்டர் செய்வது குறித்து காண்போம்.

step 1: https://uidai.gov.in அல்லது https://resident.uidai.gov.in வெஃப்சைட்டை நோக்கவும் .

step 2: மை ஆதார் டேப் என்பதன் கீழ் ஆர்டர் ஆதார் கார்டு சேவையை அழுத்தவும்.

step3: உங்கள் 12 இலக்க ஆதார் எண் (UID) அல்லது 16 இலக்க மெய்நிகர் அடையாள எண் (VID) அல்லது 28 இலக்கங்கள் கொண்ட பதிவு ஐடியை உள்ளிடவும்.

step 4: கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்

step 5: உங்களிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லையென்றால், எனது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்ற பெட்டியில் சரி செய்யவும்.

step 6: பதிவு செய்யப்படாத அல்லது மாற்று மொபைல் எண்ணை உள்ளிடவும்.

step 7: OTP அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்

step 8: விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு எதிரான தேர்வுப்பெட்டியைக் அழுத்தவும்.

step 9: சமர்ப்பி பட்டனை அழுத்தவும்.

step 10: பணம் செலுத்து என்பதை அழுத்தவும்.

உடனே நீங்கள் பேமெண்ட் கேட்வே பக்கத்திற்கு செல்வீர்கள். இதனை வெற்றிகரமான கட்டணத்தைத் தொடர்ந்து, டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய ரசீது உருவாக்கப்படும். அதை நீங்கள் PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். சேவை கோரிக்கை எண் உங்களுக்கு மெசேஜ் மூலம் அனுப்பப்படும்.மேலும்UIDAI இணையதளத்தின் வழி கீழ்காணும் முறைகளில் ஒன்றை பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்தலாம். Credit card,depit card,net banking,upi,pay tm

Categories

Tech |