மன்னார்குடி அரசூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவியை பாம்பு கடித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் இருக்கும் அரசூர் கிராமத்தை சேர்ந்த சுகேந்திரன் என்பவருடைய மகள் நவ ரஞ்சனி(வயது 16). இவர் சவளக்காரன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நவரஞ்சனி எப்போதும் போல் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியில் அவர் கழிவறைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதனால் அவர் வலிதாங்க முடியாமல் கூச்சலிட்டுள்ளார்.
உடனே அங்கு சென்ற ஆசிரியர்கள் அவரை மீட்டு மன்னார்குடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது .இருப்பினும் மாணவியை எந்தவகை பாம்பு கடித்தது என்ற விவரம் தெரியவில்லை. ஆனாலும் தீவிரசிகிச்சை அளித்ததால் தற்போது அவர் நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளார்கள். இது`குறித்து மன்னார்குடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.