Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்க போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?!!!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, குமரி உள்பட தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல் நாளை முதல் 22-ம் தேதி வரை தென் மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், விருதுநகரில் மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |