Categories
அரசியல்

தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்போது உடைந்த இயந்திரம்…. வீணானது 1 மணி நேரம்….!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் 5-வது வார்டில் தேவி கருமாரியம்மன் பள்ளியில் 75-வது வாக்கு மையத்தில் வாக்குப்பதிவுக்காக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானது. அதாவது காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் 1 மணி நேரத்திற்கு பின் இயந்திரம் பழுதானது.

இதனிடையில் காலை தொடங்கிய வாக்குப்பதிவில் 35 பேர் வாக்குப்பதிவு செய்துள்ள நிலையில், 36ஆவது ஆக பதிவு செய்யும்போது தாமரை சின்னத்தில், பட்டன் இயந்திரத்தில் இருந்து உடைந்து உள்ளே சென்று பழுதானது. அப்போது வாக்குப்பதிவு மையத்தில் இருந்த அதிகாரிகள் முயற்சி செய்தும் அதை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்களாலும் சரிசெய்ய முடியாததால் அந்த வாக்கு இயந்திரம் மாற்றப்பட்டு புதிய வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டது. அதன்பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதன் காரணமாக 1 மணி நேரம் வாக்குப்பதிவு தடை செய்யப்பட்டது. இதனால்  வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்தனர். இதேபோன்று திருவொற்றியூர் விக்டோரியா பள்ளியில் 165-வது பூத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் காலை 7 மணிக்கு முதல் வாக்கு செலுத்தியவுடன் பழுதானது. அதன்பின் தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அது சரி செய்யப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு பின் வாக்குப்பதிவு தொடங்கியது..

Categories

Tech |