அமெரிக்காவில் பெண்களுக்குரிய நீச்சல் போட்டியில் மூன்றாம் பாலினத்தவர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் இந்த வருடத்திற்கான இவி லீக் பெண்கள் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இதில் கலந்து கொள்வதற்கு மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களுக்கும் அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, லியா தாமஸ் மற்றும் ஐசக் ஹிங்க் ஆகிய இரண்டு திருநங்கைகளும் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். இவர்கள் இருவருமே சக வீராங்கனைகளை காட்டிலும் அதிகமான புள்ளிகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார்கள். பெண்களுக்குரிய நீச்சல் போட்டியில் மூன்றாம் பாலினத்தவர்கள் முன்னிலையில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.