சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பரவாத 9 நாடுகளின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பல நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படாத 9 நாடுகளின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பசுபிக் பெருங்கடலில் உள்ள துவாலு என்ற பகுதியில் தற்போது வரை எவருக்கும் கொரோனா உறுதிசெய்யப்படவில்லை. மேலும் தெற்கு பசிபிக் கடலிலுள்ள டொகேலு என்ற நாட்டில் 1500 பேர் தான் வசித்து வருகிறார்கள். இந்த நாட்டிலும் தற்போது வரை எவருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.
அதேபோல் இங்கிலாந்து ஆதிக்கத்திலுள்ள தெற்கு அட்லாண்டிக் கடலில் இருக்கும் செயின்ட் ஹெலேனா என்ற நாட்டிலும் தற்போது வரை கொரோனா எவருக்கும் உறுதிசெய்யப்படவில்லை. இதனையடுத்து தெற்கு பசிபிக் கடலிலுள்ள நியூ மற்றும் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மூலையிலுள்ள நவுரு என்ற பகுதியிலும் தற்போது வரை எவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதைத் தவிர பசுபிக் கடலில் உள்ள பாலினீசியர்கள் பூர்வகுடிகளாக வசித்துவரும் பிக்டேய்ர்ன் தீவிலும், மைக்ரோனேசியா, துர்க்மேனிஸ்தான் மற்றும் வட கொரிய நாடுகளிலும் தற்போது வரை கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.