Categories
சினிமா

அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடிய VJ அஞ்சனா…. நீங்கள் இப்படி செய்வீங்கனு நெனச்சோம்…. புகழும் தளபதியன்ஸ்….!!!

VJ அஞ்சனா, விஜயின் அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அஞ்சனா பணியாற்றினார். பிறகு 2016-ஆம் வருடம் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமானதால் கெரியருக்கு கொஞ்சம் பிரேக் விட்டார். மீண்டும் 2019-ஆம் வருடம் தனியார் தொலைக்காட்சியான  புதுயுகம் மூலம் தொகுப்பாளினி பணியை மீண்டும்  தொடர்ந்தார். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் சினிமா ஆடியோ லான்ச், திரைப்படம்  ரிலீஸ் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

https://www.instagram.com/reel/CaCbkjHgwLx/?utm_source=ig_web_button_share_sheet

இந்நிலையில் தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான அஞ்சனா அண்மையில் வெளியான அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.  இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் தீவிர ரசிகையான நீங்கள் இப்படி செய்வீர்கள் என எதிர்பார்த்தோம் என கமெண்ட் பாக்ஸ்களில் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |