நடிகை கௌரி கிஷன் தனது முதல் காரை வாங்கியுள்ளார்.
நடிகை கௌரி கிஷன் 96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர். இவர் மலையாள மொழியில் மார்கம்களி என்ற படத்தில் முதன் முதலில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் 96 படத்தின் ரீமேக்கில் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழில் கர்ணன், மாஸ்டர் படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது கௌரி கிஷன் தனது முதல் காரை வாங்கியுள்ளார்.
இவர் ஜெர்மனியின் தயாரிப்பான Volkswagen Taigun காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை சுமார் 13.50 லட்சம் முதல் 22 லட்சம் வரை இருக்குமாம். இது ஒரு SUV கார் மற்றும் 1310 கர்ப் எடை உடையதாம். மேலும் 188 கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 385 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியவற்றை கொண்டுள்ளதாம். இந்த கார் 5 வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறதாம். மேலும் லிட்டருக்கு 18.47 கி.மீ மைலேஜ் தருமாம்.