காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி பிபிஜிடி சங்கர் மீது ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு ஒன்றின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சங்கரின் பினாமி பெயரில் ரூ.25 கோடி மதிப்பிலான 79 சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதில் ரூ.25 கோடி மதிப்பிலான 79 சொத்துக்களை அமலாக்க துறை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. இதனிடையில் சங்கர் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு உட்பட்ட வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.