கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த 10-வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்துள்ள புழல் லட்சுமிபுரம் கங்கை அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் தனசேகர்-மீனா தம்பதியினர். இவர்களது மகன் சுரேஷ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-வகுப்பு படித்து வந்தார். சுரேஷ் தனது வீட்டில் எந்த நேரமும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே இருந்ததால் அவரது தாய் மீனா கண்டித்துள்ளார் . இதனால் மனமுடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் தனது தாயின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அறையின் கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்காததால் மீனா பயந்து அக்கம்பக்கத்தினரை அழைத்து அவர்கள் உதவியுடன் கதவை உடைந்து பார்த்தபோது தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை மீனா கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.