உலகம் முழுவதும் இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். காதல், சோகம், வேதனை, துக்கம் ஆகிய பல பேரின் கவலைகளை மறக்க வைப்பது இவரின் இசை தான். அதேபோன்று பலரது இரவு நேர தாலாட்டும் ராஜாவின் இசை என்றே கூறலாம். 1970-ல் தொடங்கி திரைதுறையில் 30 வருடங்களுக்கு மேலாக இசை உலகில் இளையராஜா ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். இவர் இதுவரையிலும் 1000 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா பாடல்களை எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்கள் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இளையராஜா பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்று தனி நீதிபதி உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.