போரில் தோல்வி அடைந்தால் அதிபர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் கடந்த சில நாட்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படையினருக்கும் ரஷ்யாவின் ஆதரவு கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசின் செய்தி தொடர்பாளர் கிவ் நகரில் நேற்று நிருபர்களிடம் பேசினார்.
அப்போது “கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தன் மீதான அரசு படையின் தாக்குதல் ஒருவேளை தோல்வி அடைந்தால் அதிபர் அலுவலகம், நாடாளுமன்றம், பாதுகாப்பு கவுன்சில், மற்றும் அமைச்சர்களை கிவ் நகரிலிருந்து லீவிவ் நகருக்கு மாற்றிவிடலாம் என உக்ரைன் அரசு அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக உளவு தகவல்கள் கூறுகின்றன” என தெரிவித்துள்ளார்.