Categories
மாநில செய்திகள்

கட்சியில் இருந்து மொத்தம் 140-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் நீக்கம்…. அமைச்சர் துரைமுருகன் அதிரடி….!!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை(பிப்..19) ஒரே கட்டமாக நடைபெற இருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தமிழகத்தில் பிரதான கட்சிகள் என்று கூறப்படும் தி.மு.க., அ.தி.மு.க. தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக தனித்து களமிறங்க திட்டமிட்டு சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

இதன் காரணமாக தி.மு.க., அ.தி.மு.க. கட்சியில் இருந்து தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்கள் என்று கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். முன்னதாக தி.மு.க. வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட திமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 45 தி.மு.க. நிர்வாகிகள் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுவரையிலும் 140க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளை தற்காலிக நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |