விசைத்தறி தொழிலாளி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதர்க்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள தேவனாங்குறிச்சி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி சென்ற பிரகாஷ் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை. இதனையடுத்து கருவேப்பன்பட்டி அருகே உள்ள கடப்பான்காடு பகுதியில் பிரகாஷ் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாஷின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்த நிலையில் பிரகாஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து திருச்செங்கோடு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.