ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாளாக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். வெளியூர் பயணம் என்றால் கையில் கையிருப்பு கரையும். இன்று அரசியல் துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடைகளையும் தாண்டி செயல்பட வேண்டியிருக்கும்.
எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். உங்களுடைய செயல் திறமை கூடும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். எல்லாம் முயற்சிகளுமே உங்களுக்கு இன்று வெற்றி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். உழைத்து பாடங்களைப் படியுங்கள்.
நிதானத்தை மேற்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் கருநீல நிறம்