வீடுகள் வாங்குவதற்கான செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிதாக வீடு வாங்க திட்டமிட்டு உள்ளோர்க்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வீடுகளுக்கான செலவு தற்போது உயரப் போகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, நவி மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் வீடுகளின் விலை உயர உள்ளது. கொரோனா காலத்தில் வீடு வாங்குவோருக்கு நிவாரணம் அளிக்கவும், ரியல் எஸ்டேட் துறையினருக்கு உதவவும் மெட்ரோ செஸ் வரி மகாராஷ்டிர அரசால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதே இதற்கான காரணமாகும்.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி மெட்ரோ செஸ் வரி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மெட்ரோ செஸ் வரி மீண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் காரணமாக வீடு வாங்குவதற்கான செலவுகள் மறுபடியும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரத்தில்1 % வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மகாராஷ்டிராவில் மும்பை, தானே, நவி மும்பை, பிம்ப்ரி சிஞ்ச்வாட், புனே, நாக்பூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.