Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் ரத்து?… வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!

தமிழகத்தில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் இலவசமாக உள்ளூர் அரசு பேருந்துகளில் பயணிக்கும் திட்டத்தை அரசு கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் மகளிர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அரசுக்கு நிதி நெருக்கடி நிலை காரணமாக இந்த திட்டத்தை ரத்து செய்ய இருப்பதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 (நாளை) நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் தமிழகத்தில் கடந்த 3 வருடங்களுக்கு பிறகு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பொதுமக்களின் வாக்குகளை பெறுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு பொது கூட்டங்களையும் மற்றும் பிரச்சாரங்களையும் நடத்தி வந்தனர். இந்த பிரச்சாரங்களில் பல நலத்திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும்.

மேலும் ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரை இகழ்ந்து பேசுவதும் இடம்பெறும். இந்நிலையில் தமிழகத்தில் முன்பே அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்பட வாய்ப்பு இல்லை. அதுமட்டுமல்லாமல் அரசு பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணத்தை நிறுத்த இருப்பதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது செய்தியோ வெளியாகவில்லை. இதனை உண்மையான செய்தி போல எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே பொதுமக்கள் யாரும் இது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |