தமிழக சுகாதாரத் துறை சாா்பாக 108 ஆம்புலன்ஸ் சேவையில் 1,000க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், 41 இருசக்கர வாகனங்கள் அவசர உதவிக்காக இயக்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அவையும் மருத்துவ சேவைகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நெருக்கடி சூழலைக் கருத்தில் கொண்டு கூடுதலாக ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளா்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் திருப்பூரில் (இன்று) 18 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆம்புலன்ஸ் சேவை மைய அலுவலர் உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது,
# பணியின் பெயர்- மருத்துவ உதவியாளர், டிரைவர்
# விண்ணப்பதாரர் வயது வரம்பு – 22 முதல் 35 வரை
# வேலைவாய்ப்பு முகாம் நடக்கும் நாள்- இன்று ( 18ம் தேதி)
# மாத சம்பள விவரம்- ரூபாய் 14,966
# இடம் – திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை பல், கண், காது, மூக்கு பிரிவு அலுவலகத்தில் காலை 9.30 – மாலை 3 மணி வரையிலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
# விண்ணப்பதாரர் தகுதி- பி.எஸ்.சி., நர்சிங் (அல்லது) லேப் டெக்னீஷியன் (அல்லது) டி.பார்ம் (அல்லது) அரசு மருத்துவ கல்லூரியில் ஒரு வருடம் சான்றிதழ் படிப்பு பயின்ற ஆண், பெண் பங்கு பெறலாம். அதன்பின் கல்வி, ஓட்டுநர் லைசன்ஸ் மற்றும் அனுபவம் குறித்த அனைத்து அசல் சான்றிதழ்களையும் நேர்காணலில் சரிபார்க்க கொண்டு வர வேண்டும். பொது வாகன உரிமம் (பேட்ஜ்) மற்றும் இலகுரக வாகன டிரைவர் லைசென்ஸ் பெற்று 3 வருடங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.