தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளது. அதாவது கொரோனா பரிசோதனைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, “சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை உடையவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.