உலகிலேயே எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கபட்ட பெண் குணமடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள பெண் ஒருவர் எச்.ஐ.வி நோயால் பதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார். இதுகுறித்து ஆய்வாளர்கள் எச்.ஐ.வி தொடர்பான ஆய்வில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு நியூயார்க்கை சேர்ந்த 64 வயதுள்ள பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் நோய்க்கான மருந்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அவருக்கு எலும்பு மஜ்ஜை புற்றுநோய் ஏற்பட்டது. இதற்கு பிறகு அந்த பெண்ணுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு பின் தொப்புள்கொடி ரத்தம் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்தனர். அந்த சிகிச்சையில் அவரது உடலில் எச்.ஐ.வி தொற்றை எதிர்க்கும் தன்மையை உண்டாக்கினர். மேலும் அவர் அந்த பாதிப்பிலிருந்து குணமடைந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு 14 மாதங்களாக அவரது உடல்நிலையை கண்காணித்தோம். ஆனால் அவருக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு திரும்ப வில்லை என்று மருத்துவர்கள் கூறினார். இதனை தொடர்ந்து எச்.ஐ.வி தொற்றுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். உலகிலேயே 3 வதாக எச்.ஐ.வி தொற்றில் இருந்து குணமடைந்தவர் இந்த பெண் என்று அவர்கள் தெரிவித்தனர்.