Categories
சினிமா தமிழ் சினிமா

தோல்வியிலிருந்து மீண்டு எழுந்த பிரபல நடிகை…. இப்ப டாப்ல இருக்காங்க…. செம்ம கெத்துப்பா இவங்க….!!!

நடிகை ராதிகா இரண்டு திருமண பந்தங்களில் தோல்வியை சந்தித்துள்ளார். 

இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா. இவர் அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். மேலும் இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் வெள்ளித் திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பல மேகா ஹிட்டான தொடர்களை கொடுத்தவர். தற்போது இவர் அரசியலிலும் தன் கணவருடன் பிஸியாக உள்ளார். இவரின் முதல் இரண்டு திருமணங்களும் தோல்வியையே சந்தித்தது. மேலும் நடிகை ராதிகா தயாரித்து பிரதாப் போத்தன் இயக்குனராக அறிமுகமான படம் மீண்டும் ஒரு காதல் கதை. இப்படத்தில் பிரதாப்போத்தன் மற்றும் ராதிகா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் கதை மனநிலை சரியில்லாத இருவரின் உறவை பற்றி வெளிப்படுத்தும் கதையாகும். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ராதிகா மற்றும் பிரதாப் போத்தனின் கிசுகிசுக்கள் தான் வெளியாகும். இதனைத் தொடர்ந்து ராதிகா பிரதாப் போத்தன் இருவரும் 1985-ல் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டு வெளியான இவர்களின் மீண்டும் ஒரு காதல் கதை படம் தோல்வியை சந்தித்தது. மேலும் இவர்களது குடும்ப வாழ்க்கையும் ஒரு வருடத்திற்குள்ளே முடிவுக்கு வந்துவிட்டது. பிறகு நடிகை ராதிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த வாழ்க்கையும் சில வருடங்களிலேயே முடிந்துவிட்டது. அதன்பிறகு அவர் 2001-இல் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களது திருமண பந்தம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

Categories

Tech |