Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஹலமதி ஹபிபோ’…! “இவங்க ஏன் இன்னும் ஹீரோயின் ஆகல”…. ஜோனிடாவின் பாடல்களை தேடும் இளசுகள்….!!!!

பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் காதலர் தினம் மாலை முதல் இணைய தளத்தை ஆக்கிரமித்துள்ளது. துள்ளல் இசையுடன் நடனம் ஆட தோன்றும் அரபி குத்து பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலரும் இவரை ஏன் ஹீரோயினாகவில்லை என்கிற கேள்வியை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். க்யூட்டாக பாடிக்கொண்டே ஆடுகிறார் என பலரும் பாராட்டி  வருகின்றனர்.  அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் போனாலே பல வீடியோக்கள் கொட்டிக்கிடக்கிறது.

இதனை தேடி இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர். அவருடைய தந்தை பொழுதுபோக்கு இசை கலைஞன் என்பதால் ஜொனிடாவுக்கும் இசை எளிதாக நுழைந்ததுவிட்டது. ஜொனிடாவை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார் அவரது தந்தை. இவர்  ஏ. ஆர். ரகுமான் மூலம் ஓகே காதல் கண்மணி படத்தால் தமிழுக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |