Categories
அரசியல்

“மோடி ஜெயிக்கவா நான் அரசியலுக்கு வந்தேன்…!!” நடிகர் கமல் காட்டம்…!!

வருகிற 19-ஆம் தேதி நடைபெற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் கமலஹாசன் தன்னுடைய மக்கள் நீதி மையம் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பிரச்சாரத்தின்போது அவர் கூறியதாவது, “கமலுக்கு ஓட்டு போட்டால் மோடி ஜெயித்து விடுவார் என குழந்தைத்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் சிலர் நம்பி வருகின்றனர். மோடி ஜெயிக்கவா நான் அரசியலுக்கு வந்தேன்.? கடந்த ஒன்பது மாத கால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை.

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் வாய்க்கு வந்த படி பொய்களை அள்ளி வீசி விட்டு பின்னர் ஆட்சிக்கு வந்த பிறகு அதை கண்டு கொள்வதே இல்லை. இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட உள்ளாட்சித் தேர்தல் ஒரு நல் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆகவே இந்த தேர்தலில் மக்கள் நீதி மையம் மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு வாக்களித்து எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள்.!” என அவர் கூறினார்.

Categories

Tech |