தன் கணவர் தன்னை நன்கு புரிந்துவைத்துள்ளதாக நடிகை அனுஷ்கா ஷர்மா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கணவரும் இந்திய கிரிகெட் அணியின் கேப்டனுமான விராட் கோலியுடன் சுவிட்ஸர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவரும் விராட்டும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனுஷ்கா, தன் கணவர் தன்னை நன்கு புரிந்துவைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘எனக்கு என்ன உண்ணப் பிடிக்கும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு என்னை சிரிக்கவைக்கும் என் கணவர் என்னை புரிந்துவைத்திருக்கிறார்’ என்று பதிவு செய்திருந்தார். இந்தப் பதிவை இருவரது ரசிகர்களும் விரும்பியுள்ளனர்.
https://www.instagram.com/p/B6vPsTLpPHo/?utm_source=ig_web_button_share_sheet