“உங்களில் ஒருவன்” எனும் தனது சுயசரிதை நூலை சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 45-வது சென்னை புத்தகக் காட்சி 2022-ஐ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் எழுதிய “உங்களில் ஒருவன்” நூலின் முதல் பாகம் இந்த மாத இறுதியில் வெளியாகும். எனது இளமைக்காலம் தொடங்கி 23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகளை அந்த நூலில் பதிவு செய்திருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.