சர்வதேச விமான சேவையை வருகிற மார்ச் மாதம் முதல் மத்திய அரசு மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் காரணமாக அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதனால் பல சேவைகளும் துண்டிக்கப்பட்டநிலையில் , சர்வதேச விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், மத்திய அரசு மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் மத்திய அரசு ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் சர்வதேச விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கட்டாயம் ஏழுநாள் வீட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் 8-வது நாளில் அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை எல்லாம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து வருகிற மார்ச் மாதம் முதல் இந்தியாவில் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.