Categories
அரசியல்

“இவர்தாங்க ஆர்.பி.சி அணியின் அடுத்த கேப்டன்”…. 100% அடித்து சொல்றேன்…. முன்னாள் வீரர் ஓபன் டாக் ….!!!!

ஐபிஎல் மெகா ஏலத்தில்  ஃபாஃப் டூபிளஸியை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்ச் பெங்களூர் போட்டா போட்டி போட்டு வந்துள்ளனர். ஆர்.பி.சி.யும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து ஏலம் கேட்டுள்ளது. வேறு வழியே இல்லாமல் சி.எஸ்.கே ஏலம் கேட்பதை நிறுத்தி விட்டது. அதனால் ஆர்.பி.சி.அவரை 7 கோடி ரூபாக்கு ஏலம்  கேட்டுள்ளது.  டூ பிளஸி, சிஎஸ்கே, மற்றும் புனே அணிகளுக்கான 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியவர்.

மேலும் கடந்த சீசனில் முரட்டு பார்மில் இருந்து 16 போட்டிகளில் 643 ரன்களை விளாசி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இவரை சிஎஸ்கே விட்டு  கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையாக உள்ளது. மேலும் ஆர்.பி.சி மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இவரால் கேப்டன்ஸியும்  செய்ய முடியும் சிறந்த ஒபனர் கூட, இதன் காரணமாக ஆர்.பி.சி அணி கேப்டன் ரேசில் கிளென் மேக்ஸ்வெல் இவரும் தற்போது இணைந்துள்ளார்.

தற்போது பத்திரிக்கை ஒன்றில் பேட்டி கொடுத்துள்ள ஆகாஷ் சோப்ரா “ஆர்.பி.சியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்தும் பேசியுள்ளார். 100% உறுதியாகக் கூறுவேன் ஆர்பீசி க்கு அடுத்த கேப்டன் டூ பிளஸி  தான். மற்ற வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு இருந்தபோதிலும் அவர்கள் டூ பிளஸியை வாங்க இறுதிவரை போராடினர்.

இவருக்கான ஏலம் 12 கோடி வரை சென்றிருந்தாலும் ஆர்.பி.சி  பின்வாங்கவில்லை எனவும் கூறினார். மேலும் ஒருவேளை துவக்க வீரர் தான் வேண்டும் என தேர்வு செய்திருந்தால் பேர்ஸ்டோ, ஜேசன் ராய்  போன்றவர்கள் எடுத்திருக்கலாம். டூ பிளஸி தான் தங்களின் கேப்டன் என்பதை அந்த அணி மனதில் வைத்துக்கொண்டுதான் வாங்கி உள்ளது” எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |