Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நேற்று வெற்றி….. இன்று மரணம் …. சோகத்தை ஏற்படுத்திய பஞ்சாயத்து தலைவர் …!!

பெரம்பலூர் மாவட்டம் ஆதனூரில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது.

தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி 26 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பின் படி மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிவேல் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளர். ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிச் சான்றிதழை பெற்றுச் சென்ற நிலையில் மணிவேல் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

Categories

Tech |