Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS WI முதல் டி20 போட்டி : அதிரடி காட்டிய நிக்கோலஸ் ….இந்தியாவுக்கு 158 ரன்கள் இலக்கு ….!!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரராக பிரண்ட் கிங் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.இதன்பிறகு ஜோடி சேர்ந்த கைல் மேயர்ஸ் – நிக்கோலஸ் பூரன் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 61 ரன்னும், கைல் மேயர் 31 ரன்னும் ,இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய பொல்லார்ட் 24 ரன்னும் குவித்தனர் .இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்துள்ளது.

Categories

Tech |