Categories
சினிமா தமிழ் சினிமா

ஓஹோ….! அப்படியா விஷயம்…. சிம்பு இப்படி செய்வாருன்னு நினைக்கல…. நடிகரின் கருத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்….!!!

நடிகர் பப்பு மற்றும் நடிகர் சிம்பு இருவருக்கும் டிவி நிகழ்ச்சியில் ஏற்பட்ட விவகாரம் குறித்து பப்பு இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.  

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தன் மனதில்  பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். அதனாலேயே பல சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார். இந்நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்களில் டிஆர்பிகாக அழுவது, சிரிப்பது, சண்டை போடுவது போன்ற விஷயங்களை திரும்பத் திரும்ப போட்டுக்காட்டி தங்களின் டிஆர்பியை ஏற்றி கொள்வார்கள். அந்த வகையில்  கடந்த 2007ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சிம்பு நடுவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பப்பு என்கிற பிரித்திவிராஜிற்கும் சிம்புவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்பொழுது சிம்பு உணர்ச்சிவசப்பட்டு அழுதார். மேலும் அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக கூறுவார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்த நிகழ்வு மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து தற்பொழுது பப்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிகழ்வைப் பற்றி பேசியுள்ளார். அதில் “சிம்புவிற்கும் எனக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் உண்மை அல்ல. அது எல்லாம் டிஆர்பி காக நாங்கள் நடத்திய நாடகம் அதை நீங்கள் நம்பினால் அது உங்கள் தவறு” என்று கூறியுள்ளார். இந்த நிகழ்வைப் பற்றி ஏற்கனவே அனைவரும் நாடகம் என்று பேசிய நிலையில் தற்போது பப்பு இது பற்றி கூறியது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |