அரசின் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அரசின் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என அறிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்பை மீறி 3 திருமண மண்டபங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரத்தநாடு தாலுகாவிலும் 8 விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விளம்பர பலகைகள் வைத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து விளம்பர பலகைகளை அச்சடித்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.