Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் இன்று (பிப்ரவரி 16) முதல் 20,000 மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் (பிப்ரவரி 16) பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ஆரம்பமாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பில் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தால் கற்றல் பணி எளிதாக இருக்கும் என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் 2 வருடங்களுக்குப் பிறகு மழலையர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளார். அங்கன்வாடி மழலையர் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு முகக்கவசம் வழங்க அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |