Categories
உலக செய்திகள்

“வெள்ளை போர்வை போத்திய சாலைகள்”…. பிரபல நாட்டில் பனி மழை…. உறைந்து போன மக்கள்….!!

பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி கடும் பனிபொழிவால் வெள்ளைப் போர்வை போட்டிருப்பது போல் காட்சியளிக்கிறது.  

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் கோலாகலமாக குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெய்ஜிங்கில் கடும் பனிபொழிவு  காணப்படுகிறது. இதனை  தொடர்ந்து குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் மைதானத்துக்கு செல்லும் சாலைகளில் பனி  கொட்டி கிடைக்கின்றது.

அங்கு வாகனங்கள் செல்வதற்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக உடனுக்குடன் பனியை அகற்றும் பணியில் பணியாளர்கள்  ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 4000 பொதுமக்களும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பனியினை தண்ணீர் தெளித்து மற்றும் ராட்சச வாகனங்கள் மூலமும் அகற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடும் பனிப்பொழிவால் பெய்ஜிங் நகரமே வெள்ளைப் போர்வை போட்டிருப்பது போல் காட்சியளிக்கிறது.

Categories

Tech |