Categories
இந்திய சினிமா சினிமா

காதலுக்கு வயது ஒரு தடையா, பிரியங்காவுக்கு பின் மாட்டிக்கொண்ட மலைக்கா!

இன்ஸ்டாகிராமில் அர்ஜுன் கபூருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மலைக்கா அரோராவை வயது வித்தியாசம் காரணமாக நெட்டிசன்கள் கேலி செய்துவருகின்றனர்.

சினிமாத்துறையில் பெரிய வயது வித்தியாசத்தில் காதலிக்கும் அல்லது திருமணம் செய்யும் நடிகர்களை ரசிகர்கள் கேலி செய்யும் அவலம் நீண்ட நாள்களாகவே நடக்கிறது.

இதில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ், தமிழில் ஆர்யா – சையிஷா போன்ற நடிகர்களுக்கிடையே வெகு நாள்களாக காதலித்துவரும் மலைக்கா – அர்ஜுன் கபூர் ஜோடியும் மாட்டிக்கொண்டது.

Malaika gets trolled for sharing picture with arjun kapoor

சமீபத்தில் தாங்கள் காதலிக்கும் செய்தியை அதிகாரப்பூர்வமாக மலைக்கா – அர்ஜுன் கபூர் ஜோடி ஊடகங்களில் தெரிவித்தனர். இந்நிலையில், அண்மையில் அர்ஜுனுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மலைக்கா, தான் காதலனான அர்ஜுனுக்கு கன்னத்தில் முத்தமிடுவதுபோன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

Malaika gets trolled for sharing picture with arjun kapoor

அப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் மலைக்கா – அர்ஜுனுக்கு இருக்கும் வித்தியாசத்தை காரணம் காட்டி கேலி செய்துவருகின்றனர். 40 வயதை தாண்டிய மலைக்காவை 30 வயதை கடந்த அர்ஜுன் காதலிப்பது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

https://www.instagram.com/p/B6xaS-7BDrH/?utm_source=ig_web_copy_link

Categories

Tech |