Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுதந்திரத்திற்கு பிறகு…. அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த முதியவர்…. சோகத்தில் கிராம மக்கள்….!!

அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த முதியவர் வயது முதிர்வு காரணமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருப்பராயன் பாளையம் பகுதியில் மாரப்ப கவுண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 1916-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி பிறந்துள்ளார். இவருக்கு 1 மகனும், 3 மகள்களும் இருக்கின்றனர். தற்போது இவருக்கு 105 வயதாகிறது. இந்நிலையில் மாரப்ப கவுண்டர் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1952-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தவறாமல் வாக்களித்து சாதனை படைத்துள்ளார்.

தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக இருந்த சமயத்தில் வயது முதிர்வு காரணமாக மாரப்ப கவுண்டர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு அவரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. இந்த காலத்து இளைஞர்கள் ஜனநாயக கடமையாற்ற மாரப்ப கவுண்டர் உந்து சக்தியாக இருந்தவர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |